பி.எஸ்.என்.எல் மொபைலுக்கு வரும் ஆபாச எஸ்.எம்.எஸ்!!!
பி.எஸ்.என்.எல். செல்போன் சந்தாதாரர்களை குஷிப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆபாச ஜோக்குகள் கஸ்டமர்களுக்கு அனுப்பப்படுகின்றன. பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெய்டு இணைப்பு வைத்துள்ள, ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளருக்கு BA-56677 என்ற எண்ணிலிருந்து ஒரு எஸ்எம்ஸ் வந்துள்ளது.
அதில், 18 வயதிற்கு மேற்பட்டவராக நீங்கள் இருந்தால் MLJ என்று டைப் செய்து 56677 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். ஒவ்வொரு முறையும் ஒரு மலையாள ஜோக் உங்களுக்கு வரும். நீங்கள் ஜோக்கை படித்து உங்கள் நண்பர்களுடன் சிரித்து மகிழலாம். இதற்கான கட்டணம் ரூ.2 என அந்த குறுஞ்செய்தி கூறியுள்ளது.