வியாழன், 17 டிசம்பர், 2009

வியாழன், 10 டிசம்பர், 2009

சானியா மிர்சா 2010 காலேண்டர்












புளுடூத் 3.0



புளுடூத் என்பது இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒரு மக்கள் தொழில் நுட்பமாக மாறிவிட்டது. குறிப்பாக மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் வயர்லெஸ் இணைப்பில் தங்களிடம் உள்ள படங்கள் மற்றும் பாடல்களை அடுத்த போனுக்கு மாற்றிக் கொள்ள இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
போன்களை வாங்கும் போதே இந்த தொழில் நுட்பம் உள்ளதா என்று கேட்டு வாங்குகின்றனர். இந்த தொழில் நுட்பமே மொபைல் போன்களில் வைரஸ் அனுப்புவதற்கும் வழி வகுக்கிறது என்பது இன்னொரு தீங்கான விஷயம் ஆகும்.

தற்போது இந்த தொழில் நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய வகை வெளியாக உள்ளது. தற்போது இருக்கும் தரப்படுத்தப்பட்ட புளுடூத் தொழில் நுட்பம்Bluetooth 2.0 ஆகும். அடுத்து வர இருப்பது Bluetooth 3.0. இதன் சிறப்பு இது பைல்களைப் பரிமாறும் வேகமாகத்தான் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

மிகப் பெரிய பைல்களைக் கூட சில நொடிகளில் மாற்றிக் கொள்ளும் வகையில் இந்த தொழில் நுட்பம் செயல்படும். இதில் பயன்படுத்தப்படும் Generic Alternate MAC/PHY (AMP)தொழில் நுட்பத்தின் மூலம் வை–பி வேகத்தில் இதனைச் செயல்படுத்தும்.

இதன் மூலம் வை–பி பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரு சாதனங்களில் அதிவேக பைல் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம். வை–பி வசதி ஒரு சாதனத்தில் மட்டும் இருந்தால் புளுடூத் அதனை ஈடு செய்து பைல் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது.

வாடிக்கையாளர்கள் வரவேற்பு: முகம் பார்த்து பேசும் செல்போனுக்கு “கிராக்கி”

3ஜி என்று அழைக்கக் கூடிய 3-வது தலைமுறை தகவல் தொழில் நுட்ப வசதியை சென்னை டெலிபோன்ஸ் கடந்த 3 நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது.
செல்போன் பேசுவரின் முகத்தை மறுமுனையில் உள்ளவர் வீடியோ படம் போல பார்க்கும் வசதி, இண்டர்நெட், சினிமா படம் பார்த்தல், டி.வி., சேனல்கள் பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதன்மூலம் கிடைக்கின்றன.

சென்னை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இந்த தொழில் நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதியை பெற தகுதி யுடைய செல்போன்கள் வைத்திருப்பவர்கள் திட்டத்தில் சேர விரும்பினால் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று பெறலாம். இதற்குரிய சிம்கார்டு விலை ரூ.59 ஆகும்.

ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் 3ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

திட்டம் அறிமுகப்படுத்திய 2 நாட்களில் 700 பேர் 3ஜி இணைப்பை பெற்றுள்ளனர். இதில் 450 பேர் புதிதாக இணைப்பு பெற்றவர்கள். 250 பேர் ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர்களாகும்.

திட்ட அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்புக்கு 50 பைசாவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்குள் 1 லட்சம் வாடிக்கை யாளர்களை இத்திட்டத்தில் சேர்க்க பி.எஸ்.என்.எல். இலக்காக கொண்டு செயல்படுகிறது.

முகம் பார்த்து பேசும் இந்த வசதி விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. முதலாவதாக கோயம்புத்தூர் நகரில் செயல்படுத்தப் படுகிறது.

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.

அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி

லங்கா ஸ்ரீ