புதன், 20 ஜனவரி, 2010



மேஜிக் உட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதரான ரம்பா சமீபத்தில் ஒரு நீ..ளமான காருக்கு முன் நின்று கொடுத்த போஸ் இது.

இந்த நிறுவனம் கனடாவைச் சேர்ந்தது. குளியலறை உபகரணங்கள் தயாரிப்பது.

தயாரிக்கும் பொருள் குளியலறை சமாச்சாரம்... தொடை தட்டி போஸ் கொடுக்க ரம்பா... வேறென்ன.. விதவிதமாக எடுத்துத் தள்ளிவிட்டார்களாம் ரம்பாவின் கவர்ச்சி ஸ்டில்களை.


இந்த விஷயத்தில் ரம்பா காட்டிய தாராளத்தை தாங்களும் காட்ட விரும்பினார்களோ என்னவோ, ரம்பாவின் பயணத்துக்காக இந்த நீளமான காரை அளித்துள்ளது அந்த நிறுவனம்.

தமிழில் விடியும் வரை காத்திரு படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வரும் ரம்பா, கடந்த 2009ம் ஆண்டைப் போல கோலாகலமாக தொடங்கியிருக்கும் 2010ம் ஆண்டு தனக்கு வளமான ஆண்டாக இருக்கும் என நம்புகிறாராம்.

இந்த நிறுவனத்தின் அதிபரைத்தான் ரம்பா திருமணம் செய்யவிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி ரம்பாவோ, அவரது குடும்பத்தாரோ இன்னமும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை, இறுதிநேர மாறுதலுக்குட்பட்ட நிகழ்ச்சியோ!

நன்றி
சிவாஜி டிவி